வீட்டு எரிவாயு சிலிண்டர்களில் கசிவு, தீ அல்லது வெடிப்பு போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதியின் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்திற்கும், சம்பந்தப்பட்ட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் தெரிவிக்க வேண்டும்.
பொலிஸ் விசாரணைக்கு உதவுவதற்காக Litro மற்றும் Laugh நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன இந்த அறிவுறுத்தலை மாகாணங்களுக்குப் பொறுப்பான அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.