29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

உள்ளாடை அணியாமல் அப்பக்கடை நடத்தி ‘ஓவர் நைட்டில் ஒபாமா’ ஆகிய பெண்ணிற்கு நேர்ந்த கதி!

தாய்லாந்தில் இளம் யுவதியொருவர், மேல் உள்ளாடை அணியாமல் அப்பக்கடை நடத்தி வருவதை பற்றி சில நாட்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அந்தப் பெண் இப்பொழுது பொலிசாரால் அழைக்கப்பட்டு, முறையான ஆடை அணிய வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு தாய்லாந்தில் உள்ள சியாங் மாயில், 23 வயதான ஒலிவ் ஆரண்யா அபைசோ என்ற இளம் யுவதியே இந்த அப்பக்கடையை ஆரம்பித்தார்.

மேல் உள்ளாடைகள் அணியாமல், சிறிய – தளர்வான மேலாடையால் உடம்பின் சிறிய பகுதியை மறைத்திருந்தார்.

கடையை ஆரம்பித்த போது ஒரு நாளைக்கு சராசரியாக 30 அப்பங்களை விற்றார். மேலாடையில் தாராளம் காண்பித்த பின்னர், 120- 200 அப்பங்களாக அதிகரித்துள்ளது.

காலை 11 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை அவரது தெருவோர கடை திறந்திருக்கும். அவர் கடையை திறக்க முன்னரே, வரிசையில் ஆண்கள் காத்திருப்பார்கள். அம்மணியின் குட்டி ஆடை காற்றிற்கு அசைய, அந்த வீதியால் செல்பவர்களின் மனங்களும் அலைபாய, அங்கு விபத்துக்களும் அதிகரித்தன.

இந்த அப்பக்கடை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கடை என்பதை போல தாய்லாந்து ஊடகங்களும் அப்பக்கடைக்கு படையெடுக்க ஓரிரு நாட்களிலேயே அந்தப் பெண் உலகப் பிரபலமானார்.

இருப்பினும், அந்தப் பகுதியிலுள்ள சிலர், அவரது ஆடைகள் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறி பொலிஸில் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் திகதி உள்ளூர் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

அவர்கள் ஓலிவ்வை உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது மற்றும் உணவு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

தண்டனை ஏதுமின்றி விடுவிக்கப்படுவதற்கு முன், “நகரத்தின் கலாச்சாரத்திற்கு மரியாதை” கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.

இது பற்றி ஒலிவ் கூறியதாவது: “அனைத்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் நான் பின்பற்ற தயாராக இருக்கிறேன். இதற்குப் பிறகு, நான் வித்தியாசமாக உடை அணிவேன், மேலும் எனது உடலை மறைப்பேன். சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றுவேன்.”

ஒலிவ் தனது தலைமுடியை மூடி வலைத்தொப்பி அணிய வேண்டும். ஒரு ஏப்ரோன் அணிய வேண்டும், கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும், மேலும் “பேக்கிங் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு இடையே இடைவெளியை வைத்திருக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

மாவட்ட கவுன்சில் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: சியாங் மாய் ஒரு கலாச்சார நகரம் மற்றும் மக்கள் ஆடை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மேலாடை இல்லாமல் தெருவோர அப்பக்கடை நடத்தும் யுவதி; வரிசையில் நிற்கும் ஆண்கள்: வீதியில் அடிக்கடி விபத்துக்கள்!

“நாங்கள் அந்த பெண்ணிடம் சதை நிறமுள்ள பிரா மற்றும் ஆபாசமற்ற ஆடைகளை அணிந்து கொள்ள ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டோம். இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தோம்.”

ஒலிவ்க்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, அவரது மேலாடையை மாற்றும்படி கட்டளையிடப்பட்டது. அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் இதேபோன்ற மேலாடைகளை அணிந்தால் பொது அநாகரீகத்திற்காக கைது செய்யப்படுவார்.

அவர் அறிவுரையை பின்பற்றுகிறாரா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவரது கடையை சோதனையிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் பொது அநாகரீகத்திற்கு 110 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment