26.3 C
Jaffna
December 31, 2024
Pagetamil
இலங்கை

செய்தியாளர் தாக்கப்பட்டமைக்கு வடக்கு அவைத்தலைவர் கண்டனம்!

முல்லைத்தீவில் செய்தியாளர் ஒருவர் இராணுவத்தினால் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இத் தாக்குதலானது தனிநபர் மீதான தாக்குதலாக நாம் பார்க்கவில்லை, ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகவே நாம்
இதனை பார்க்கின்றோம்.

எனவே குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதலை மேற்கொண்ட ராணுவத்தினர் மீது சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment