மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான குளங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், இராசேந்திரங்குளம் என்பன தொடர்ந்தும் வான் பாய்வதுடன், பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள கல்லாறு அணைக்கட்டும் வான் பாய்ந்து வருகின்றது. இதனால் மக்கள் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் தொடர்ந்தும் அவதானமாக இருக்கவும்.
மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக் குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.