மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் கெடுபிடிகள் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டது.
இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த பட்டுருந்த நிலையில் தமிழர் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இடம் பெற்றது.
இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1