ஒமிக்ரோன் வைரஸ் கண்டபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கூறியதற்காக பாராட்ட வேண்டும், தண்டித்து விடாதீர்கள் என தென்னாபிரிக்கா உலக நாடுகளுக்கு தனது கவலையை பதிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவில் கடந்த 24ஆம் திகதி முதல் முறையாக B.1.1.529 என்றழைக்கப்படும் 50 உருமாற்றம் கொண்ட புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதிய கொரோனா திரிபு வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரோன் (Omicron) என்ற புதிய கிரேக்க பெயரை சூட்டி உள்ளது.
அதன்பின் ஹொங்கொங், பொட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தென்னாபிரிக்கா, தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் ஒமிக்ரோன் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் தங்கள் நாட்டை பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக தென்னாபிரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒமிக்ரோன் வைரஸ் தென்னாபிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிற்குப் பிறகு இஸ்ரேலும் பெல்ஜியமும் ஓமிக்ரோன் வைரஸ் கண்டறிந்ததாக அறிவித்துள்ளன. அந்த நாடுகளுக்கான எதிர்வினை தென்னாபிரிக்காவில் உள்ள வைரஸ் என மையப்படுத்தி கூறப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் சோதனை திறன் மற்றும் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளை போலவே நாங்களும் சிறந்த முறையில் முன்னுதாரணமாக இருந்தோம். அதிகஅளவு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் இதுபோன்ற புதிய வைரஸ் இருப்பதையும் அறிவித்தோம். எங்கள் இந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும், தண்டிக்கக்கூடாது.
உலகின் பிற பகுதிகளில் புதிய மாறுபாடு கொண்ட கொகரோன வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை யாரும் மறந்து விடக்கூடாது. அந்த வைரஸ் ஒவ்வொன்றும் தென்னாபிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதையும் உலக சமூகம் மனதில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.