Pagetamil
உலகம்

புதிய ஓமைக்ரோன் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா?: ஃபைஸர், பயோஎன்டெக் கைவிரிப்பு

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஓமைக்ரோன் வைரஸுக்கு (பி.1.1.529) எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என்பதை உறுதி செய்ய இயலாது என்று ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் கைவிரித்துள்ளன.

ஆனால், ஓமைக்ரோன் வைரஸுக்கு எதிராக அடுத்த 100 நாட்களில் வீரியம் மிகுந்த தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்று ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில்தான் முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் கடந்த புதன்கிழமை உலக சுகாதார அமைப்பால்  கண்டறியப்பட்டது. அதன்பின் ஹொங்கொங், பொட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென்னாபிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

குறிப்பாக பொட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கொரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் தடுப்பூசி நிறுவனங்களான ஃபைஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வீரியம் மிகுந்த ஓமைக்ரோன் கொரோனா வைரஸுக்கு எதிராக தங்களின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுமா என உறுதியாகத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஃபைஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், “ தென்னாபிரி்க்காவில் புதிதாகக் கண்டறியப்பட்ட ஓமைக்ரோன் வகை கொரோனா வைரஸுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், அடுத்த 100 நாட்களில் ஓமைக்ரோன் வைரஸுக்கு எதிராக வீரியம் மிகுந் தடுப்பூசியை தயாரிக்க முடியும், ஒப்புதலைப் பெற முடியும்.

அடுத்த 2 வாரங்களில் ஓமைக்ரோன் வைரஸ் குறித்த அதிகமான தகவல்கள், புள்ளிவிவரங்கள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்திவரும் டெல்டா வகை வைரஸ்களில் இருந்து ஓமைக்ரோன் வகை வைரஸ் முற்றிலும் மாறுபட்டது. புதிய வகை வைரஸுக்கு ஏற்றார்போல் தங்களின் தடுப்பூசி செயல்படும் வகையில் ஏற்கெனவே ஆய்வுகளைத் தொடங்கிவிட்டோம். ஆதலால், 6 வாரங்கள் முதல் 100 நாட்களுக்குள் ஓமைக்ரோன் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாராகவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டது

ஓமைக்ரோன் வகை வைரஸ் பரவி வருவதையடுத்து, ஜெனிவாவில் நடக்க இருந்த 12வது மாநாட்டை உலக வர்த்தக அமைப்பு ஒத்திவைத்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment