25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
கிழக்கு

செய்தியாளர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது மூன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

கடந்த 24.11.2012 அன்று திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் படகு ஒன்று கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மூன்று ஊடகவியலாளர்கள், அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் பத்திரிகை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது. (சம்பந்தப்பட்ட செய்திக்குறிப்பின் நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் அரசியலமைப்பின் விதிகள் சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மற்றும் உரிமைகளுக்கான மதிப்பினை மேம்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிர்வாகக் கொள்கைகள் மேற்பார்வையில் இருந்து சட்ட மற்றும் நிர்வாக நெகிழ்வினை நடைமுறைப்படுத்துவதை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதில் சம்பவத்தை செய்தியாக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகள், உதவி மற்றும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்கள் அந்தச் செயல்பாட்டைச் சரியாகச் செயல்படுத்துகின்றனவா மற்றும் மேற்கூறிய அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு இது அமைவாகும்.

இது தொடர்பாக உரிய பொலிஸ் நிலையத்திலிருந்து நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை எதிர்வரும் 10.12.2021 அல்லது அதற்கு முன் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளது . .

மேலும் இந்த அறிக்கை 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தென்னிலங்கையில் ஊடகவியலார் தாக்கபட்டதும் தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தில் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் மிரட்டகளுக்குள்ளாவது அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment