இன்று மாவீரர் நாள்.
தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மறவர்களை நினைவுகூர்ந்து ஆண்டு தோறும் உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் இன்று மாவீரர்நாளை அனுட்டிப்பது வழமை.
தாயகத்தில் மாவீரர்நாள் அனுட்டிப்பிற்கு அரசு பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவுகளை பெறும் முயற்சியில் பொலிசார் இறங்கினர். எனினும், பல நீதிமன்றங்கள் அந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டன.
உலகெங்குமுள்ள ஈழத்தமிழர்கள் இன்று உணர்வுபூர்வமாக மாவீரர் நாளை அனுட்டிக்கவுள்ளனர்.
விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. யுத்தம் முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டு வந்தது.
மாலை 6.05 மணிக்கு மணியொலிக்க தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
யுத்தம் முடிந்ததும், வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் படையினரால் இழித்தழிக்கப்பட்டதுடன், பகிரங்க மாவீரர் நாள் அனுட்டானங்கள் இடம்பெறவில்லை. எனினும், நல்லாட்சி காலத்தில் பகிரங்கமாக மாவீரர்நாள் அனுட்டானங்கள் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுன அரசு பதவியேற்ற பின்னர் அனைத்து விதமான அஞ்சலி நிகழ்வும் தடைசெய்யப்பட்டுள்ளது.