27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

கடாபி மகன் தேர்தலில் போட்டியிட தடை!

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, டிசம்பரில் நடைபெறவிருக்கும் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று லிபியாவின் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

புதன்கிழமையன்று ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 25 வேட்பாளர்களில் கடாபியும் ஒருவர். ஜனாதிபதி தேர்தலிற்காக 98 பேர் பதிவு செய்திருந்தனர்.

மேல்முறையீட்டுச் செயல்முறை நிலுவையில் உள்ள ஆரம்ப முடிவில் நீதித்துறையால் முடிவு செய்யப்படும். சுமார் 98 லிபியர்கள் வேட்பாளர்களாக பதிவு செய்திருந்தனர்.

லிபியா நாட்டின் அதிபராக 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பதவி வகித்து கொடி கட்டிப்பறந்தவர் முயம்மர் அல் கடாபி. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செயய்ப்பட்டு கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் ஜனாதிபதியாக உள்ளார்.

இந்தநிலையில் அங்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 98வேட்புமனுக்கள் தாக்கலாகி உள்ளன. பெண் உரிமைப்போராளியான லீலாபென் கலிபா (46) மட்டும்தான் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கொல்லப்பட்ட கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி கடந்த 14ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் மீதான போர்க்குற்ற வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை நிலுவையில் உள்ளது.

2011 இல் அவரது தந்தையை ஆட்சியிலிருந்து அகற்றிய எழுச்சியை எதிர்த்துப் போராடியதற்காக 2015 இல் போர்க் குற்றச் சாட்டுகளில் அவர் ஆஜராகாததால் கடாபியை நிராகரிக்குமாறு திரிப்போலியில் உள்ள இராணுவ வழக்குரைஞர், ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

இதன் காரணமாக அவர்  தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

இதேபோன்று வலிமை வாய்ந்த தலைவராக அங்கு கருதப் படுகிற இராணுவத் தளபதி கல்பா ஹப்தாரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க குடிமகன், போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்வதால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற சபாநாயகருமான அகுயிலா சலேவால் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகள் “குறைபாடுள்ளவை” என்று விவரித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

Leave a Comment