24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் அனேக குளங்கள் வான் பாய ஆரம்பித்தன: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. 25 அடி அடைவு மட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவு மட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடு குளம் அடைவுமட்டத்த அடைந்து 1 அங்குலம் வான் பாய்ந்து வருகிறது.

19 அடி அடைவு மட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் அடைவு மட்டத்த அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் அடைவு மட்டத்தை அடைந்து 7 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 4 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

8 அடி ஆறு அங்குலம் அடைவு மட்டம் கொண்ட குடமுருட்டி குளம் அடைவுமட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும், மாவட்டத்திற்கு மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்ப தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment