25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியா டெஸ்ட் கப்டன் பாட் கம்மின்ஸ்: 65 வருடங்களின் பின் தலைமையேற்கும் வேகப்பந்துவீச்சாளர்!

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் அதிகாரபூர்வ பதவியை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கப்டனாக நியமிக்கப்படுவது 65 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாகும். கடைசியாக கடந்த 1956ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் கப்டனாக இருந்தார். அதன்பின் வேகப்பந்துவீச்சாளர் யாரும் கப்டனாக நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கப்டனாக இருந்த டிம் பெயின் பாலியல் சர்ச்சையில் சிக்கியதால் தாமாக முன்வந்து கப்டன் பதவியை இராஜினாமா செய்தார். மேலும், தற்காலிகமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகி இருப்தாகவும் பெயின் தெரிவித்து விட்டதால், ஆஷஸ் தொடரிலும் விளையாட மாட்டார்.

இதையடுத்து, அணிக்கு புதிய கப்டன் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனையில் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் கப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் துணைக் கப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியில் துணைக் கப்டனாக கம்மின்ஸ் இருந்து வந்தநிலையில் தற்போது கப்டன் பதவி தரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “பாட் கம்மின் சிறந்த வீரர், தலைமைப்பண்பு உடையவர். அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் அதிகமான மதிப்பைப் பெற்றவர், போட்டியின் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவுஸ்திேரலிய அணிக்கு கப்டனாக பாட் கம்மின்ஸும், துணைக் கப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

கப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், “அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன். டிம் பெயின் வழங்கிய அதே பொறுப்பான செயல்பாட்டை நானும் வழங்குவேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மட்டுமல்லாமல் ஒருநாள், ரி20 போட்டிகளுக்கும் ஏற்றார்போல் பாட் கம்மின்ஸ் ஆடி வருகிறார். அவுஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 35 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கம்மின்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ஹாரி புரூக்

Pagetamil

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment