32.2 C
Jaffna
April 19, 2024
இலங்கை

மந்த வேகத்தால் புகையிரத சேவை பிரபலமற்றதாகி விட்டது!

புகையிரத சேவைகள் மந்தகதியில் இடம்பெறுவதால் புகையிரத சேவையானது பிரபலமற்ற போக்குவரத்து முறையாக மாறியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பேசிய இராஜாங்க அமைச்சர், தற்போது பயன்பாட்டில் இல்லாத அனைத்து ரயில் பாதைகளையும் பயணிகள் போக்குவரத்திற்காக இலகு ரயில்களாகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2022 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். ரயில்களுக்கு 40, 50, 60 கிமீ வேகத்தில் வேக வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இது ஒரு பிரபலமற்ற போக்குவரத்து முறையாகும் என்றும் கூறினார்.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர் என்றார்.

இன்று 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கள் மற்றும் ஐந்து அரச அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

Leave a Comment