மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய 23,193 நபர்கள் பொலிஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கை காலை 10 மணி முதல் மதியம் வரையிலும், மீண்டும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தப்பட்டது.
நேற்றைய தினம் 6,324 நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முகக்கவசம் அணியாத 4,351 பாதசாரிகளுக்கு பொலிஸாரால் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
மேல் மாகாணத்தில் நேற்றைய நடவடிக்கையில் 1,475 பொலிஸார் அங்கம் வகித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
7,105 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
3,334 வாகன ஓட்டிகள் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1