25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாவீரர்நாள் தடைக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் மனு!

மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நீக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுத் தொடர்பாக பதிலளிக்க, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 2 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாவீரர்நாள் அனுட்டிப்பிற்கு தடைவிதிக்க கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம், கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதில், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமாகி என்.சிறிகாந்தாவிற்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (24) சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றில் முன்னிலையாகி, தன் மீது விதிக்கப்பட்ட தடைக்கட்டளையை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

அந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் மன்றிற்கு அழைக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டிய அவர், பிரிவு 106இன் கீழ், அந்த கட்டளையை திருத்தவோ, மாற்றம் செய்யவோ முடியுமென்பதால், தடையுத்தரவை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மதியம் 2 மணிக்கு முன்னிலையாகி, பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment