Pagetamil
இலங்கை

பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி குளத்திற்குள் சென்ற நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. இதனையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment