அம்பாறை திருக்கோலில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரியை நேற்று (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பணியாகியுள்ளார். வைத்திய பரிசோதனையில் கர்ப்பம் உறுதியாதையடுத்து, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் சகோதரியின் கணவனான 31 வயதானவரே கர்ப்பத்திற்கு காரணமென்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் தலைமறைவாகி விட்டார்.
பொலிசார் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 சகோதரி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.