விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்திலும் சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கியுள்ளது படக்குழு.
தற்போது அனைத்துப் பணிகளையும் முடித்து இப்படத்தை வரும் ஜனவரி 26ஆம் திகதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.