மாவீரர்தினத்திற்கு தடைவிதிக்க கோரி ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.
மாவீரர்தினத்தை அனுட்டிக்க 5 பேருக்கு தடைவிதிக்குமாறு கோரி, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை பொலிசார் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இன்றைய வழக்கில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி சமர்ப்பணம் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதவான் கஜநிதி பாலன், பொலிசாரின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1