Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து கடமைகளை தொடர்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிஎம் காஸ்டெக்ஸ் தனது மகள்களில் ஒருவர் நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்ததும் “உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொண்டார்” என்று அலுவலகம் கூறியது.

பிரதமர் காஸ்டெக்ஸ் நேற்று காலை பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்தார். அங்கு அவர் பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்தார்.

அவருடன் பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டார்மானின் மற்றும் ஐரோப்பிய அமைச்சர் கிளெமென்ட் பியூன் உட்பட பல மூத்த சகாக்கள் இந்த பயணத்தில் இருந்தனர்.

56 வயதான பிரதமர் காஸ்டெக்ஸ், இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு தொற்றால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!