கிண்ணியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கிண்ணியா- குறிஞ்சாங்கேணி பால நிர்மாண பணிகள் நடந்து வரும் நிலையில், மாற்று ஏற்பாடாக பொதுமக்களின் பயணித்திற்காக படகு போக்குவரத்து ஏற்பாடாகியிருந்தது.
இன்று காலை ஏற்பட்ட அனர்த்தத்தில் படகில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கிண்ணியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா நகரில் ரயர்கள் எரிக்கப்பட்டு, போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா தள வைத்தியசாலை, பிரதேச செயலகம் என்பவற்றிற்கு முன்பாக இளைஞர்கள் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பால புனரமைப்பு பணியை மழைக்காலத்தில் ஆரம்பித்தது யார் என அவர்கள் கொந்தளிப்புடன் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1