2019ஆம் ஆண்டு தொடக்கம் 2020 க்கு இடையில் இலங்கையில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 12% குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் மொத்தம் 163, 378 திருமண பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் 143,061 ஆக குறைந்துள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அங்கு 14, 617 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன.
2000-2012 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2013 – 2020 க்கு இடையில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2000-2012 க்கு இடையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 200,000 திருமண பதிவுகள் பதிவாகியுள்ளன.
2000 ஆம் ஆண்டில் மொத்தம் 194,217 திருமணங்களும் 2005 இல் 195,067 திருமணங்களும் பதிவாகியுள்ளன, 2010 இல் 200,985 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், 2015 இல் 175,939 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அதன் பின்னர் ஒரு குறைவு காணப்பட்டது.
2020 இல் 143,061 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதன் மூலம் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.