25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil
சினிமா

வலிமை பட வில்லன் கார்த்திகேயாவின் பிரம்மாண்ட திருமணம்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்திகேயா கும்மகொண்டா. இவர், தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து ஹாப்பி குணா படத்தில் நடித்தார்.

தமிழ்சினிமாவில் பிக்பாஸ் ஓவியா கதாநாயகியாக நடித்த 90 எம்எல் படத்தில் சில காட்சிகளில் மட்டும் கார்த்திகேயா நடித்திருந்தார். சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் கார்த்திகேயா தனது நீண்ட நாள் தோழியான லோகிதா ரெட்டியை இன்று திருமணம் செய்துகொண்டார். கார்த்திகேயா, லோகிதா இருவரும் 2010 இல் இன்ஜினியரிங் படிக்கும் பொழுது காதலித்து வந்தார்கள். அந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

தெலுங்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி நேரில் வாழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

Leave a Comment