25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
சினிமா

6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக விளங்குபவர் ஷ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது மகனின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தாலும் முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் அளவுக்கு உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தனது மகன் பேசுவது போன்று ஒரு பதிவையும் அவர் செய்துள்ளார். எனது பெயர் தேவ்யான். நான் இப்போது ஆறு மாதம் ஆகி உள்ளேன். நான் தற்போது மிகவும் பிசியாக பாடல்கள் கேட்டுக் கொண்டும் புத்தகம் படித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறேன். பெரும்பாலான நேரங்களை எனது அம்மாவுடன் கழிக்கின்றேன். அவர் என்னை கவனமாக பார்த்துக் கொள்கிறார். உங்கள் அனைவரது அன்பும் ஆசியும் எனக்கு தேவை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

Leave a Comment