மெக்சிக்கோவில் 2 கனரக வாகனங்களில் மறைந்திருந்த சுமார் 600 குடியேறிகளை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் குவாட்டமாலாவை ஒட்டிய பகுதிய வெராக்ரூஸ் மாகாணத்தில் இவர்கள் கைதாகினர். கனரக வாகனங்கள் ஒளிந்து, அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது, அவர்கள் கைதாகியுள்ளனர்.
12 நாடுகளை சேர்ந்த இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளில், 455 ஆண்களும், 145 பெண்களும் அடங்குகிறார்கள்.
கைதானவர்களில் 401 பேர் குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள், 53 பேர் ஹோண்டுரஸைச் சேர்ந்தவர்கள், 40 பேர் டொமினிகன் குடியரசைச் சேர்ந்தவர்கள், 37 பேர் பங்களததேஷை சேர்ந்தவர்கள், 27 பேர் நிகரகுவாவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் எல் சால்வடாரைச் சேர்ந்தவர்கள், 8 பேர் கியூபாவைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கானாவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் வெனிசுலாவைச் சேர்ந்த வர்கள். 4 பேர் ஈக்வடாரைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் தமிழக அகதி முகாமை சேர்ந்த இலங்கையர் மற்றும் கமரூனைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது மெக்சிகோவில் தங்கியிருப்பதை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்று மெச்சிக்கோ அரசாங்கத்தின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் (INM) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து பெரும்பாலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் மெக்சிக்கோவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலனவர்கள், சொந்த நாடுகளில் வறுமை, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.