சுகயீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனையின் பேரில் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவதற்காக நவம்பர் 10 ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் நேற்று இரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் வசமிருந்த கையடக்கத் தொலைபேசியை கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அவர் மூவரடங்கிய சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1