சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடி என்றால் அது சித்து, ஸ்ரேயா ஜோடி தான். இந்த ஜோடி முதல் முதலாக திருமணம் என்னும் சீரியலில் இணைந்து நடித்தனர்.
இந்த சீரியல் நடிக்கும் பொழுது அவர்களுடைய ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஜோடி நிஜ வாழ்விலும் காதலர்களாக மாறினர்.
இவர்கள் இருவரும் தங்கள் காதலை ரசிகர்களிடம் வெளிப்படையாக அறிவித்த நிலையில் தற்போது திருமணம் எனும் பந்தத்தில் இணைந்துள்ளனர். நேற்று சித்து, ஸ்ரேயாவின் திருமணத்திற்கு முந்தைய சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது.
சித்து, ஸ்ரேயாவுக்கு தாலி கட்டும்போது ஸ்ரேயா தன்னுடைய வழக்கமான குழந்தை சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் ஸ்ரேயா கழுத்தில் இருக்கும் தாலியை கண்ணில் ஒற்றிக் கொண்டு சித்துவின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறார். இதைக் கண்டு நெகிழ்ந்து போன சிந்து ஸ்ரேயாவை அணைத்துக் கொள்கிறார். சித்துவின் காலை தொட்டு கும்பிட்ட ஸ்ரேயா
இவர்களின் இந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகர்-நடிகைகள் பலரும் ஸ்ரேயாவின் திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் இவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.