ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு பாடசாலைகளை மாணவிகளை பத்து வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வாகன சாரதி ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர்.
சந்தேகநபர் 4 வயது முதல் இளைய சகோதரியையும், 9 வயது முதல் மூத்த சகோதரியையும் பத்து வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இளைய சகோதரி பண்டாரவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீது கடந்த காலங்களிலும் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1