ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்த இஷ்க் விஷ்க் படம் ரிலீஸானபோதுஈ அவரது மனைவி மீரா ராஜ்புட் 7 வயதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்..
பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்கிற மகளும், ஜெயின் என்கிற மகனும் இருக்கிறார்கள்.
ஷாஹித் கபூருக்கு திருமணம் நடந்தபோது அவருக்கும், மீராவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஷாஹித் கபூரின் படங்கள் பற்றி பேசியிருக்கிறார் மீரா.
அவர் கூறியதாவது,
ஷாஹித் கபூரும், அம்ரிதா ராவும் சேர்ந்து நடித்த இஷ்க் விஷ்க் படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த படம் வந்தபோது எனக்கு 7 வயது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எங்கிருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் ஷாஹிதை சாக்லேட் பாய் என்று அழைத்தது மட்டும் நினைவிருக்கிறது.
என் நெருங்கிய தோழிக்கு ஷாஹித் மீது கிரஷ் இருந்தது. அது பற்றி இன்றும்கூட நான் அவளுடன் பேசி சிரிப்பது உண்டு. நான் ஷாஹிதின் பழைய படங்களை பார்க்கத் துவங்கினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது சுப் சுப் கே என்றார்.