24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

ஆடு திருடியவர்களை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் வெட்டிக் கொலை!

புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன்.

இவர் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் தலையில் வெட்டுக்காயத்துடன் அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

நவல்பட்டு எல்லைப் பகுதியில் இருந்து ஆடுகளை ஏற்றி வந்த இரு சக்கர வாகனங்களை பூமிநாதன் துரத்தி வந்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியிருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பிக்கள் சிவசுப்பிரமணியன், அருண்மொழிஅரசு தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள், 2 துணை ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment