24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

பொறுப்புக்கூறலை மேற்கொள்ளாமல் 300 மில்லியனை ஒதுங்கியதை ஏற்க முடியாது!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெறுமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டுகின்றார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிலைமையில், வெள்ள அழிவு மற்றும் பசளை இன்மையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்புடும் நிலை காணப்படுகின்றது. அதைவிட விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

அன்றாட வாழ்க்கையில் வாழும் மக்களும் சரி, அரச உத்தியோகத்தர்களும் சரி 2 வாரங்கள்கூட வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாத நிலையில் திணறுகின்றார்கள். ஆனால் இன்று வந்துள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் என்பது வெறும் மாயையான வரவு செலவு திட்டமாக இருக்கின்றது.

எந்தவொரு சமூக நலன் சார்ந்து அல்லது, வறுமையை போக்கக்கூடிய அளவிலான வரவுசெலவு திட்டமாக இது அமைந்திருக்கவில்லை. கடன்பட்டு இந்த நாட்டை கொண்டு நடத்துகின்ற நிலையிலும் இன்று தாயின் கருவில் இருக்கின்ற பிள்ளையின் தலையைில்கூட கடன் சுமையை சுமத்தக்கூடிய நிலையில்தான் இந்த அரசு போய்க்கொண்டிருக்கின்றது.

அதற்கு இந்த அரசு மாத்திரம் காரணமல்ல. கடந்த காலங்களில் இருந்த அரசும் இதற்கு காரணமாகத்தான் இருக்கின்றது. அதற்கு முன்னர் இருந்த இதே அரசு திவிநெகும நிதி மோசடியிலிருந்து பல பல மோசடிகள் பேசப்பட்டதாக இருக்கின்றது. பின்னர் வந்த ஆட்சியாளர்களில் மத்தியவங்கி பிணைமுறி மோசடியிலிருந்து மகாபொல உள்ளிட்ட மோசடிகளும் பேசப்பட்டதாக இருந்தது. தீர்வுகள் எட்டப்படவில்லை.

தற்பொழுது உள்ள இந்த அரசும் தங்களுடைய குடும்ப ஆட்சிக்குள் அமைச்சர்களை உருவாக்கிவிட்டு விளையாட்டுப்பிள்ளைகள் போன்று காசுகளை மத்தியவங்கி ஊடாக அச்சடித்துக்கொண்டு இன்றைக்கு பெரிய பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

பொருளாதார வல்லுனர்களைக்கொண்டு இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை எவ்வாறு சீர்ப்படுத்தலாம் என்ற எந்தவொரு சிந்தனைப்போக்கும் இல்லாமல் தொடர்ந்து இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளுவதென்பது ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் மக்களுடைய வாழ்வியலை பெரிதும் பாதிக்கும்.

ஒருநேர உணவுக்குகூட மக்கள் அஞ்சுகின்ற நிலையில், கொலை கொள்ளை எனும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாக இருக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல், அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கபூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல் 300 மில்லியனை இந்த வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு செலவு திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும்.

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் பூர்வாங்க விசாரணை ஒன்றை சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெறுமனே 300 மில்லியனை ஒதுக்கி விட்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவதுபோலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

எனவே இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புகூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்கின்ற கோரிக்கையை செவிமடுக்கவேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்களிற்கு இருக்கின்றது. ஏனெனில் இசர்வதேசத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொண்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவதுபோலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த நிதி ஓதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

Leave a Comment