மல்யுத்த ஜாம்பவான் ஹல்க் ஹோகனின் உடல் நிலை மோசமான கட்டத்தில் உள்ளதாக, அவரது’ நீண்டகால நண்பரும் போட்டியாளருமான ரிக் ஃபிளேர் தெரிவித்தள்ளர்.
72 வயதான ஃபிளேர், ஹல்க் ஹோகனின் சமகால போட்டியாளர் என்றாலும், மல்யுத்த களத்திற்கு வெளியே நெருங்கிய நண்பர்.
அவர் வெளியிட்ட தகவலில்,
“ஹல்க் ஹோகனிற்கு சில மோசமான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். நல்லதும் கெட்டதும் ஒருவரை ஒருவர் ஆதரிக்கிறோம்.” என்றார்.
ஹோகன் (68) பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 25 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என, அவரது மகள் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.
12 முறை உலக சாம்பியனான அவரை WWE ரசிகர்கள் நன்கறிவார்கள். குறிப்பாக 90களின் ரசிகர்கள், சிவப்பு, மஞ்சள் – கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை அணிந்தபடி அரங்கிற்கு வரும் அவரை மறந்திருக்க மாட்டார்கள்.
நீண்டகாலம் ஓய்விலிருந்தவர், 2014 இல் WWE க்கு திரும்பிய பின்ன் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார். அவரது மகள் ஒரு கறுப்பின மனிதனுடன் உறவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் வெறுப்படைவார் என்று கூறும் ஒலிப்பதிவு வெளியாகியிருந்தது. இனவெறி கருத்திற்காக WWE இல் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் இணைக்கப்பட்டார்.
தான் “ஒரு இனவெறியன்” என்பதை அவர் பின்னர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.