இறந்தவர்கள் தொடர்பில் அவர்களது உறவுகள் நினைவுகூர்வதும், அதற்காக பிரார்த்தனை செய்வதெல்லாம். அரசியல் நடவடிக்கையாக முன்னெடுப்பதுதான் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளல் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
கடந்த ஆட்சி காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. தற்பொழுது மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவுகளை பொலிசார் பெற்று வருகின்றனர். இது தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் என்ன தெரிவிக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர்,
ஆட்சிக்கு ஆட்சி மாற்றங்கள் உள்ளது. இப்பொழுது பார்த்தீர்களெனில், அந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் அன்று அரசாங்கத்திறகு எதிரான கோசத்தில் நந்தி ஒழிக என்று குறிப்பிட்டிருந்தார்கள். நந்தி என்பது தமிழ் மக்களுடையதும், இந்து மக்களுடையதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு சின்னம்.
ஆனால் இவர்கள் நந்தி ஒழிக என்று போட்டுள்ளார்கள். அவர்கள் நாட்டையு்ம, மக்களையும், தவறாக வழிநடத்த முற்படுவதாகதான் அன்று மேற்கொண்டிருந்தார்கள்.
ஆனால், இறந்தவர்கள் தொடர்பில் அவர்களது உறவுகள் நினைவுகூர்வதும், அதற்காக பிரார்த்தனை செய்வதெல்லாம் பிரச்சினை அல்ல. இதை ஒரு அரசியல் நடவடிக்கையாக முன்னெடுக்கும்போதுதான் இவ்வாறான பிரச்சினைகள் வரும்.வந்தும் உள்ளது. இதைதான் அன்று முதல் நான் சொல்லி வருகின்றேன் என அவர் தெரிவித்தார்.