முல்லைத்தீவில் 6 வயதான சிறுமியை, வாயைப் பொத்தி பாழடைந்த வீட்டிற்கு இழுத்து சென்ற 17 வயதான இளைஞன், நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தீர்த்தக்கரை, அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு அண்மையாக, நேற்று (18) இந்த சம்பவம் நடந்தது.
கடைக்கு பொருள் வாங்க சென்ற சிறுமி திரும்பி வந்த போது, சிறுமியை அழைத்து, திடீரென வாயைப் பொத்தி, அருகிலுள்ள பாழடைந்த வீட்டிற்குள் இளைஞன் இழுத்து சென்றுள்ளார்.
இளைஞனின் பிடியிலிருந்து தப்பித்த சிறுமி, வெளியே ஓடிவந்த கூக்குரலிட்டதை தொடர்ந்து, அங்கு கூடியவர்கள், இளைஞனை மடக்கிப் பிடித்து, முறைப்படி கவனித்தனர்.
பின்னர் முல்லைத்தீவு பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1