நேற்று 737 நபர்கள் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தொற்றுநோய் பரவியதில் இருந்து இதுவரை இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 554,459 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 இலிருந்து மீண்ட 372 நபர்கள் வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 525,560 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 14,827 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் புதன்கிழமை 15 COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன, வைரஸ் தொடர்பான இறப்பு எண்ணிக்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1