சுன்னாகம் பகுதியில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 2 மணி அளவில் பணி நிமித்தம் வெளியே செல்லும் போது, அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இரண்டு இளைஞர்கள் அவரை நடு வீதியில் அடித்து வீழ்த்தி, தரதரவென வீட்டுக்குள் இழுத்து சென்று மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர். போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.