23.7 C
Jaffna
March 8, 2025
Pagetamil
இலங்கை

பாலத்தை புனரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் நேற்று (17) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் 11.00 மணியளவில் ஆர்ப்பாடம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் குறித்த பதையில் உள்ள பாலத்தினை புதிதாக அபிவிருத்தி செய்து தருவதாக கடந்த மார்ச் மாதமளவில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மழை காலம் வருவதற்கு முன்னர் புதியபாலம் அமைத்து தருவதாக கூறி பயன் பாட்டிலிருந்த குறித்த பாலத்தினை முற்றாக அகற்றியுள்ளனர்.

பாலம் அகற்றப்பட்டு பல மாதகாலம் கடந்த நிலையிலும் பாலம் புனரமைப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் மக்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதாயின் இப்பகுதிக்கு நோயானர் காவுவண்டி செல்ல முடியாத நிலையிலுள்ளதுடன், நீண்ட தூரம் நடந்து சென்று நோயாளர் காவு வண்டியில் செல்லவேண்டி உள்ளதாகவும், மேலும் பாடசாலை மாணவர்கள் சுத்தமான உடை அணிந்து செல்லமுடியாத நிலையும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறுவதன் காரணமாகவும் தமது பகுதியில் வீதிகள் மிகவும் சேதமடைந்துள்ளதுடன், தற்பொழுது தனியார் ஒருவரினது காணியின் ஊடாகவே பயணிக்கவேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காளர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!