தமிழ் கட்சிகளிற்கிடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டை உடைக்கும் சூழ்ச்சியே சம்பந்தனின் முயற்சி: சாடுகிறார் சுரேஷ்!

Date:

தமிழ் கட்சிகளுடன் ஒன்றாக சந்திப்பை நடத்துவதென இரா.சம்பந்தன் தரப்பு மேற்கொள்ளும் முயற்சி, ஏற்கனவே தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமையை உடைக்கும் சூழ்ச்சி முயற்சியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தமிழ் மொழி பேசும் சிறுபான்மையின கட்சிகளிற்கிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டும், பிறிதொரு முயற்சியை இரா.சம்பந்தன் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கலந்து கொள்ளுமா என, அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை தமிழ்பக்கம் வினவியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்தார்கள். மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்பதையும் விட்டுக் கொடுத்தார்கள். சமஷ்டி என்பதிலும் உள்ளுடல் என்பதில் சமஷ்டியாக இருக்கும், பெயர்ப்பலகையில் என்ன இருக்கிறது என்றெல்லாம் கேட்டார்கள். இவ்வளவையும் விட்டுக் கொடுத்தும், இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

அது யாரென்றால், இவர்கள் உருவாக்கிய அரசாங்கம். இவர்களது அரசாங்கம். இவர்கள் பங்கேற்ற அரசாங்கம்.

இன்று இவர்கள் குறிப்பிடும் அரசாங்கமென்பது, இவர்களிற்கு எதிரான அரசாங்கம். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அரசாங்கம். அதற்கான நிகழ்ச்சி நிரலை மிக நேர்த்தியாக நடைமுறைப்படுத்தும் அரசாங்கம்.

அவர்கள் இவர்களோடு பேசுவதற்கு கூட இன்னும் உருப்படியான நிகழ்ச்சி நிரலைகூட கொண்டிருக்காத அரசாங்கம்.

அப்படியான ஒரு அரசாங்கத்துடன் பேசி, தமக்கு சாதகமான ஒரு அரசியல் சாசனம் வருமென எதிர்பார்த்து, ஏனைய கட்சிகளை இணைப்பதென்பது, சம்பந்தனின் அறியாமையா? அல்லது, என்ன அடிப்படையில் அப்படி யோசிக்கிறார்  என எனக்கு விளங்கவில்லை.

இந்த அரசாங்கம் ஏதாவது செய்யுமென சம்பந்தனிற்கு ஏதாவது பொறி தட்டியுள்ளதா?

இந்த அரசாங்கம் எதுவும் செய்யுமென நான் நம்பவில்லை. அப்படியிருக்கும் போது, ஏனைய கட்சிகளையும் அழைத்து புதிய அரசியல் சாசனம் பற்றி பேச வேண்டுமென சொல்வது, முக்கியமான பிரச்சனைகளை கையாள ஏற்கனவே எடுத்த முயற்சிகளை முடக்குவதற்கான ஒன்றாக இருக்குமே தவிர வேறல்ல.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வந்ததாக சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை மாற்றுவேன் என எந்த அடிப்படையில் உங்களால் கூற முடியும்? யார் உங்களிற்கு உதவிகரமாக இருப்பார்கள்? இந்தியா இருக்கிறதா? அமெரிக்கா இருக்கிறதா? உலகம் இருக்கிறதா? அல்லது அதை செய்யக்கூடிய விதமாக நீங்களாவது இருக்கிறீர்களா?

இது பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லாமல், எல்லோரையும் கூப்பிடுவோம் பேசுவோம் என சம்பந்தன் கூறுவது, எற்கனவே எடுத்த முயற்சியை பாழாக்கும், இல்லாமல் செய்யும் முயற்சியே தவிர, வேறொன்றுமில்லை.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்