சீரற்ற காலநிலை காரணமாக பிரதான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
விஜயராஜதஹன புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், பல்லேவெல மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதைகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதையடுத்து பிரதான பாதையில் 10 ரயில்கள் மாத்திரம் இன்று கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதன்படி, ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்த பகுதி வரை மூன்று ரயில்கள் இயக்கப்படும், பின்னர் மூன்று கூடுதல் ரயில்கள் சேதமடைந்த ரயில் பாதைகளைத் தவிர்த்து அந்தப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் செல்லும்.
வெயங்கொடவில் இருந்து நான்கு புகையிரதங்களும், கம்பஹாவில் இருந்து ஒன்றும், ராகமவில் இருந்து இரண்டு புகையிரதங்களும் கொழும்பு கோட்டை நிலையம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.