நேற்று 697 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 551,542 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 695 பேர் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
13,618 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 426 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 523,929 ஆக உயர்த்தியது.
தொற்று சந்தேகத்தில் 1,806 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மரணித்தவர்களின் எண்ணிக்கை 13,995 ஆக அதிகரித்துள்ளது.