Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாமே: அதிருப்தியாளர்களை ஒன்றுகூட்டி மணிவண்ணன் தரப்பு அதிரடி நடவடிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கைப்பற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு நடப்பதாக அறிய முடிகிறது.

வவுனியா நகரில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (14) காலையில் இருந்து மாலை வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர்களாக இருந்து, தற்போது அதிருப்தியுடன் ஒதுங்கியிருப்பவர்களே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கட்சியின் யாழ் மாவட்ட தற்போதைய அமைப்பாளர், மன்னார் மாவட்ட அமைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களில்- அம்பாறை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா 3 பேர் வீதம் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரை உரிமை கோருவது, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாகாணசபை தேர்தலில் களமிறங்குவது ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து நாளை விரிவான பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும் என்றும், முன்னணியின் முதலாவது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்த 5 பேர் தற்போது தமது தரப்பில் இருப்பதாகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருவர் மாத்திரமே உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்படவுள்ளதாகவும் அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் யாழ் மாநகர மேயருடன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசல்யா, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பி.யானுயன், இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment