சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் ஒப்பந்தமாகியுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தின் கதையினை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5’, ‘தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் இப்படத்திலும் பணிபுரிகிறார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள்.
இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு செய்துவிட்டு தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை மும்பையில் படமாக்கி வருகிறது படக்குழு.
இந்நிலையில் இப்படத்தில் இதில் சிம்புவுக்கு வில்லனான நடிக்க, வளர்ந்து வரும் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘த்ரிஷ்யம்’, ‘சார்லி’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் இந்தியில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் மூலம் பிரபலமானார்.