தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜபுத்திரன் சாணக்கியன், நாடாளுமன்றத்தில் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் வேறொன்றும் பேசுவதாக ஆளுந்தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று (15) நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.
சாணக்கியன் உரையாற்றிய போது, தமிழிலும், சிங்களத்திலும் உரையாற்றினார். தமிழில் உரையாற்றிய போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் உள்ளக அபிவிருத்திக்கு எந்த விசேட திட்டமும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லையென்றார்.
பின்னர் சிங்களத்தில் உரையாற்றிய போது, கிராமிய ரீதியான அபிவிருத்திக்க அரசாங்கம் நிதியொதுக்கும் திட்டத்தை விமர்சனம் செய்தார்.
இதன்போது, குறுக்கிட்ட ஆளுந்தரப்பு, சாணக்கியன் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் வேறொன்றும் உரையாற்றுவதாக சுட்டிக்காட்டினர்.
எனினும், சாணக்கியன் அதை மறுத்தார்.
வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்க விசேட திட்டங்கள் இல்லாமை, மற்றும் அரசாங்கத்தின் தவறான அபிவிருத்தி திட்டத்தையே விமர்சித்ததாகவும், அனைத்து இரண்டு மொழியிலும் ஒரே கருத்தையே முன்வைப்பதாக தெரிவித்தார்.