தெற்கு எகிப்தில், குடியிருப்புக்களிற்குள் படையெடுத்த தேள் கூட்டம் கடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைல் ஆற்றோரத்தில் அமைந்துள்ள அஸ்வான் நகரில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. கடுமையான புயல், மழை வெள்ளத்தால் தேள்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி, குடியிருப்புக்களிற்குள் புகுந்துள்ளன.
மலைப்பகுதிகள், பாலைவனங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கூடுதல் நச்சு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
COVID-19 தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், தேள் கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக நச்சு வெளியிடும் தேள் வகைகளில் ஒன்றான fat-tailed வகை, எகிப்தில் உள்ளது.
fat-tailed தேளின் நச்சு, மனிதர்களை ஒரு மணி நேரத்துக்குள் கொன்றுவிடக்கூடிய வீரியம் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஹடாசா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் கூற்றுப்படி, உலகில் அறியப்பட்ட 1,000 வகையான தேள்கள் உள்ளன. இஸ்ரேலில் 21 வகைகள் உள்ளன. அவற்றில் fat-tailed தேள்கள் உட்பட ஐந்து வகையானவை நச்சு விஷத்தைக் கொண்டுள்ளன.