ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனுமதியளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
‘ஏன் இந்த போராட்டம்?. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா?. இல்லை, நோயைப் பரப்பி, இந்த நாட்டை மீண்டும் ஒருமுறை பாதாளத்தில் தள்ளப் போகிறார்கள். அதற்கு, காவல்துறையாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பொலிசார் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
எங்களுடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும்.
யார் என்ன சொன்னாலும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். நீதிமன்ற உத்தரவு வந்தால், கண்டிப்பாக அந்த சட்டவிரோத பேரணிகளையும், சட்ட விரோத போராட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம். அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
காவல்துறை சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தால், அவர்கள் அதை கடைபிடிக்கின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் .இந்த மாதிரி பேரணிகளால் நோய் பரவலாம், இன்னொரு அலை வரலாம், பிறகு நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும்?’ என்றார்.