24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

வவுனியா வடக்கு வலய பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா தொற்று!

வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று (13) துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பரிசோதனையில் அப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment