ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் ரணதுங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மினுவாங்கொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ருவான் ரணதுங்கவும் கலந்துகொண்டார்.
ருவன் ரணதுங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் சகோதரர் ஆவார்.
அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1