24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
குற்றம்

காதலியின் பிறந்தநாளில் பென்ஸ் கார் பரிசளித்து பிரபலமானவர்: 21 வயது யுவதியை பலவந்தமாக அழைத்து செல்ல முயன்றபோது குத்திக்கொலை!

காதலியின் பிறந்தநாளன்று, அவருக்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் பரிசளித்து இணையத்தில் பிரபலமடைந்த, கோடீஸ்வர வர்த்தகர் கொல்லப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த வர்த்தகர், அனுராதபுரத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து 21 வயதான யுவதியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்ற சமயத்தில், யுவதியின் சகோதரன் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கொழும்பு, நாவின்ன பகுதிகளில் மிகப் பிரபலமான இரண்டு சலூன்களை நடத்தி வந்த மல்லவ ஆராச்சிகே பத்தும் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி மாலை எலயபத்துவ, கல்பொத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.

உயிரிழந்தவரும் கல்கடவல, கல்பொத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே யாருடைய உதவியுமின்றி உழைத்து, தற்போது கோடீஸ்வரராக கொழும்பில் வாழ்க்கை நடத்துகிறார்.

அந்த பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதியொருவரை தனது வணிக நிறுவனத்திற்காக பணிக்காக அழைத்து சென்றுள்ளார்.

எனினும், அடுத்தடுத்த வாரங்களில் யுவதி வீடு திரும்பி விட்டார். அங்கு பணி சிரமமாக இருப்பதாகவும், பணியாற்ற விரும்பவில்லையென்றும் வீட்டில் கூகூறியுள்ளார்.

இந்த நிலையில், 10ஆம் திகதி யுவதியின் வீட்டுக்கு வந்த தொழிலதிபர், வலுக்கட்டாயமாக யுவதியை வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற போது, கொலை இடம்பெற்றுள்ளது.

யுவதியின் சகோதரன் வாளால் அவரை வெட்டியுள்ளார்.

வர்த்தகர் வீடு புகுந்த போது, யுவதி அறைக்குள் தாழிட்டு விட்டு, உதவி கோரி சத்தமிட்டுள்ளார். எனினும், அவரை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல வர்த்தகர் முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் வீடு திரும்பிய யுவதியின் சகோதரனுக்கும் அவருக்கும் தர்க்கம் ஏற்பட்டது. தர்க்கம் உச்சமாக, வீட்டிலிருந்த 5 அடி நீளமாக வாளால் வர்த்தகரை வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

யுவதியின் சகோதரனான 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment