முதல் இரவில் என்ன செய்தீர்கள் என்று செய்தியாளரிடம் கேட்டு அதிர வைத்துள்ளார் கன்னட நடிகை ரச்சிதா ராம்.
தான் நடித்திருக்கும் லவ் யூ ரச்சு கன்னட படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் ரச்சிதா ராம்.
அந்த படத்தில் அஜய் ராவும், ரச்சிதா ராமும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி வைரலானது. நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்படி நடித்திருக்கிறீர்களே என்று செய்தியாளர் ஒருவர் ரச்சிதாவிடம் கேட்டார்.
அதற்கு ரச்சிதா கூறியதாவது,
கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன். இங்கு இருப்பவர்களில் பலருக்கு திருமணமாகி விட்டது. நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. திருமணத்திற்கு பிறகு மக்கள் என்ன செய்வார்கள் என்று தான் கேட்கிறேன். என்ன செய்வார்கள்?
ரொமானஸ் செய்வார்கள். சரியா?. அதை தான் படத்தில் காட்டியிருக்கிறோம். நீங்கள் முதல் இரவில் என்ன செய்தீர்கள்?
நான் அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இருக்கும். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். உங்களுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது, நீங்கள் சொல்லுங்கள் என்றார்.
முன்னதாக ஐ லவ் யூ படத்தில் உபேந்திராவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் தன் குடும்பத்தார் வேதனை அடைந்ததாக கூறினார் ரச்சிதா. அதனால் இனி ஹாட் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார். இந்நிலையில் மீண்டும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.