பாடசாலை பேரூந்து மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபாவும், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




